ஈஷா சோழா கோப்பைக்கான இறுதிப்போட்டிகள் ஆதியோகி சிலை முன்பு நடத்த ஏற்பாடு

கோவை, டிசம்பர் 19

ஈஷா அவுட்ரீச் மற்றும் சோழ மண்டலம் குழுமம் இணைந்து நடத்தும் ஈஷா சோழா கோப்பைக்கான இறுதிப்போட்டிகள் ஆதியோகி சிலை முன்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிராம மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் ஈஷாஅவுட்ரீச், கிராம இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஈஷா சோழா கோப்பைக்கான வாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகளை கடந்த 9-ம் தேதி முதல் நடத்தி வருகிறது. சுமார் 700 கிராமங்களில் இருந்து 320 வாலிபால் மற்றும் 58 த்ரோபால் அணிகள் கலந்து கொண்டன. சுமார் 3,500 ஆண்கள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த அணிகளில் இடம்பெற்றனர்.

புதுச்சேரியிலும், தமிழகத்தில் கோவை, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, திருச்சி, விருத்தாசலம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களின் கிராமப்புற அணிகளுக்கு நடைபெற்ற போட்டிகளின் காலிறுதி, அரைஇறுதிச் சுற்றுகள் வரும் 20, 21-ம் தேதிகளில் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 21-ம்தேதி இறுதிசுற்று நடைபெறும். வெற்றிபெரும் அணிகளுக்கு ஈஷா சோழா கோப்பையும் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

டிசம்பர் 21-ம்தேதி நடக்கும் ஆண்களுக்கான வாலிபால் மற்றும் பெண்களுக்கான த்ரோபால் போட்டிகள் வரலாற்று சிறப்புமிக்க 112 அடி ஆதியோகி திருவுருவச்சிலை முன்னிலையில் காலை 8 மணி முதல் நடக்கிறது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...