விமான நிலைய விரிவாக்கத்திற்காக கழிவுநீர் தொட்டியை இடமாற்றம் செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு

கோவை, டிசம்பர் 18

விமான நிலைய விரிவாக்கத்திற்கு நில எடுப்பு செய்யும்போது மனிதக் கழிவுநீர் தொட்டி பாதிக்கப்படுவதால். அதற்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என பூங்காநகர் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- கோவை விமான நிலையம் அருகே பூங்கா நகர் பகுதியில் 1994-ஆம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரியத்தால் மனைப்பகுதி பிரிக்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த குடியிருப்பு வாரியத்தில் பாதாள சாக்கடை, சாலை வசதி, மழைநீர் வடிகால், மனிதக் கழிவுநீர் தொட்டி உள்ளிட்டவற்றை வீட்டுவசதி வாரியமே கட்டிக் கொடுத்துள்ளது. 

இந்த நிலையில், தற்போது விமான நிலைய விரிவாக்கத்திற்காக பூங்காநகர் பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டி அபகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தினால், பாதாள சாக்கடை முழுவதும் அடைபடும். எனவே, நில எடுப்பு செய்யும் முன் அதற்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். இவ்வாறு அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...