இன்ஸ்பெக்டர் முனிசேகர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பெரியபாண்டியன் பலி-ராஜஸ்தான் எஸ்பி தகவல்

டிசம்பர், 17

ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற இடத்தில் கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகரனின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில்தான் பெரியபாண்டியன் மரணமடைந்ததாக ராஜஸ்தான் எஸ்பி தீபக் பார்கவ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் கடந்த மாதம் ஒரு நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த மூன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் அமைக்கப்பட்டனர். இதுதொடர்பாக 4 பேரைக் கைது செய்த போலீஸார், முக்கிய குற்றவாளிகளான நாதுராம், தினேஷ் சவுத்ரி உள்ளிட்டோரைத் தேடி ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திற்குச் சென்றனர்.

அங்கு நாதுராம் உள்ளிட்ட கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது பெரியபாண்டியனின் துப்பாக்கியைப் பறித்த நாதுராம் போலீஸாரை நோக்கி சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பெரியபாண்டியன் உயிரிழந்துவிட்டார். மேலும் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் காயமடைந்தார்.

இந்நிலையில் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் ராஜஸ்தான் மாநிலத்தில் கொலை நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். இதனிடையே தினேஷ் சவுத்ரியை மட்டும் கைது செய்துவிட்டு இன்று தமிழகம் விரைந்தனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தின் காவல்துறை எஸ்பி தீபக் பார்கவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கொள்ளையன் நாதுராமை பிடிக்கும் முயற்சியின் போது பெரியபாண்டியன் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, பெரியபாண்டியன், முனிசேகர் துப்பாக்கிகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில், கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துதான் அவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாதுராமை நோக்கி முனிசேகர் சுட்டபோது குறி தவறி பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்தது என்று அதிர்ச்சி அளிக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் எஸ்பி தீபக்.

Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...