ஏடிஎம்களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பும் பணியை மேற்கொள்ளத் தடை : மத்திய அரசு முடிவு

டிசம்பர் 15

இனி ஏடிஎம்களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பும் பணிக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. 

நாடு முழுவதும் 8 ஆயிரம் தனியார் வேன்கள் மூலம் தினமும் ரூ. 15,000 கோடி ரொக்கப்பணம் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பப் பயன்படுத்தப்படுகின்றன. தவிரக் கூடுதலாக ரூ. 5,000 கோடி, தனியார் செக்யூரிட்டி ஏஜென்சிகள் மூலம் பணம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் பணம் கொண்டு செல்லும் வாகனங்களைக் குறி வைத்து தாக்கி கொள்ளையடிப்பது, வேனுடன் கடத்திச் செல்வது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, நக்சல்கள் பாதித்த பகுதிகளில் இது மிகவும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்கான புதிய விதிமுறைகளைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இது குறித்து நிதித்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கையில், இனி தனியார் வாகனங்கள் இரவில் 9 மணிக்கு மேல் ஏடிஎம் மையங்களுக்கு பணம் கொண்டு செல்வதை நிறுத்திட வேண்டும். நக்சல் பாதித்த பகுதிகளில் மாலை 6 மணிக்குள் பணம் நிரப்பிட வேண்டும். ஒரு வேனில் அதிகபட்சமாக ரூ. 5 கோடிக்கு மேல் கொண்டு செல்லக்கூடாது. பணம் கொண்டு செல்லும் வாகனங்களில் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவிகள், சி.சி.டி.வி. கேமிராக்கள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கருவிகள் பொருத்த வேண்டும். இதனை அனைத்து வங்கிகளின் செக்யூரிட்டி வாகனங்கள், தனியார் செக்யூரிட்டி வாகனங்களும் பின்பற்ற வேண்டும் என்ற வகையில் புதிய விதிமுறைகளை வகுக்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...