டிசம்பர் 15
முத்தலாக் சட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இஸ்லாமியர்களில் மும்முறை தலாக் சொல்லி விவாகரத்து பெறுவதை குற்றமாகக் கருதி தகுந்த நடவடிக்கை எடுக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் தயாரித்தது. இந்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், முத்தலாக் விவகாரத்திற்கு எதிரான சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.