கோவை, டிசம்பர் 14
கோவையில் தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது, சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் காந்திபுரம் பகுதியில் சிலை அமைக்க வேண்டும். ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரம் செறிந்த போர் நடத்திய தீரன் சின்னமலை வரலாற்றை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், மக்களிடம் நாட்டுப்பற்றை அதிகரிக்கவும் இந்த சிலை உதவும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.