டிசம்பர் மாதத்தில் குளிர் போக போக அதிகரிக்கும்

கோவை, டிசம்பர் 13

இந்த வருடம் டிசம்பர் மாதம் குளிர் தமிழகத்தில் போக போக அதிகரிக்கும் என்று கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆய்வு மையத் தலைவர் எஸ்.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவையை பொறுத்த வரையில் இரவு நேரங்களில் குளிர் வாட்டி வதைக்கிறது அதே சமயம் பகலில் வெயில் அதிகரித்து காணப்படுகிறது இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

இது குறித்து பன்னீர்செல்வம் கூறியதாவது,

“இந்த வருடம் டிசம்பர் மாதம் பொறுத்த வரையில் கடந்த ஆண்டினை போலவே தான்இருக்கிறது எந்த ஒரு மாறுதலும் இல்லை. தற்போது இரவு நேரங்களில் குளிர் 23 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ்வரை உள்ளது அதே சமயம் பகல் நேரத்தில் 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இது இயல்பான அளவு தான் ஆனால் இந்த குளிர் ஜனவரி மாதம் மூன்றாவது வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது அப்போது இரவு நேரங்களில் குளிர் 19 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும், வெயில் சற்று அதிகரித்து காணப்படலாம்.

இந்த குளிரானது கொண்டக்கடலை மற்றும் காய்கறி வகைகள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் அதே சமயம் திராட்சை உள்ளிட்ட கொடி வகை செடிகள் பயிரிட்டுள்ள விவிசாயிகளுக்கு நன்மை பயக்காது,”

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...