இயற்கை மருத்துவப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரிப்பு: உதகை கருத்தரங்கில் தகவல்

நீலகிரி, டிசம்பர் 13

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இயற்கை மருத்துவப் பொருள்களின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளதாக உதகையில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

மைசூரில் செயல்பட்டு வரும் ஜே.எஸ்.எஸ். பல்கலைக் கழகத்தின் சார்பில் உதகையில் உள்ள ஜே.எஸ்.எஸ். பார்மஸி கல்லூரியில் இயற்கை மூலிகை மருந்துகள் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில், மியான்மர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, உகாண்டா, ஜெர்மனி உள்ளிட்ட நாட்டின் பிரதிநிதிகளுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மூலிகை ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில், கருத்தரங்கின் தலைவர் பேராசிரியர் சின்னசாமி பேசுகையில், மூலிகை மருத்துவம் என்பது ஒரு செடியிலிருந்தோ, பழத்திலிருந்தோ ஒரு மூலக்கூற்றை மட்டும் தனியாகப் பிரித்து மருந்து உண்டாக்குவது அல்ல. அந்த தாவரத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேவையான சத்தைப் பிரித்து மருந்து தயாரிப்பதாகும். கடந்த 10 ஆண்டுகளாக  இயற்கை வழி மருந்துகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.



எத்தகைய சிகிச்சை முறையாக இருந்தாலும் இயற்கை மருந்துகள்தான் அவற்றுக்கு ஆதாரமாகும். விலங்குகளிடமிருந்தும் தற்போது மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் ஜீன் பரிமாற்ற முறையிலேயே மருந்துகள் தயாரிக்கப்படும் சூழலும் உருவாகி வருகிறது. மூலிகை மருந்துகளுக்கு ஐஎஸ்ஓ தரக் கட்டுப்பாடு பெறும் முயற்சிகள் தீவிரமடைந்து வருகிறது என்றார்.

இதனைத்தொடர்ந்து, வேலூரைச் சேர்ந்த இயற்கை மருந்து ஆராய்ச்சியாளர் டாக்டர் நரசிம்மன் பேசுகையில், இயற்கை மருந்துகளின் முக்கியத்துவம் தற்போது உலகெங்கும் பரவி வருவதால் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் மருந்து உற்பத்தியும் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளதோடு குறிப்பிட்ட நிறுவனத்துடைய மருந்துகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்றார்.



தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் ஜேஎஸ்எஸ் பார்மஸி கல்லூரியின் தலைவர் டாக்டர் தனபால், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சீனிவாச பட்னாலா, சென்னை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராமன், ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் நிர்மல் ராபின்சன் உள்ளிட்டோர் இயற்கை மருத்துவத்தின் பயன் மற்றும் வளர்ச்சிகள் குறித்து பேசினர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...