குமரியில் புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் : உயிரிழந்த மீனவர்களுக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

டிசம்பர் 12 

ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டம் சென்றார். மாவட்ட எல்லையான காவல் கிணற்றில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான், விஜயகுமார் எம்.பி. மற்றும் அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

காவல்கிணற்றில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேராக தூத்தூர் மீனவ கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள புனித யூதா ததேயூ கல்லூரியில் 8 கிராம மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, ஓகி புயலில் வீடு இழந்தவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், இறந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் பணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். பின்னர், மாயமான மீனவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.



பின்னர், அங்கிருந்து மணவாளக்குறிச்சியை அடுத்த வெள்ளிமலை கல்படி ஏலாவில் விவசாயிகளை சந்தித்துப் பேசிய அவர்,  அங்குச் சேதமான பயிர் நிலங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குமரி மாவட்டம் வருகையையோட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Newsletter

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...