ஆரோக்கியமான நகரம், ஆரோக்கியமான வாழ்க்கை விழிப்புணர்வு மாரத்தான்

கோவை, டிசம்பர் 10

கோவையில் செயல்பட்டு வரும் கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் "ஆரோக்கியமான நகரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை" குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கே.எம்.சி.எச் சார்பில் தொடர்ந்து 24-வது முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு. கே. பெரியய்யா கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில், சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சூலூர் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் இருந்து சிட்ராவில் அமைந்துள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையினை வந்தடைந்தனர் இதனைத்தொடர்ந்து, மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதுகுறித்து கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் மருத்துவர் நல்ல ஜி பழனிசாமி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சியானது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, அதனை கருத்தில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்றார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...