கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு

கோவை, டிசம்பர் 9 

கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி வழங்கக்கோரி ஆதித்தமிழர் கட்சியினர் இன்று மதியம் மாநகர காவல் ஆணையர் K. பெரியய்யா-விடம் மனு அளித்தனர். 



இது தொடர்பாக அந்த மனுவில் கூறப்பட்டதாவது:- 

கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதற்காக கடந்த 2007-ம் ஆண்டு கோவை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செஞ்சிலுவை சங்கம் எதிரே உள்ள போக்குவரத்து தீவுத் திடலில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவரும் சிலை அமைக்க பரிந்துரை செய்தார் ஆனால், இன்னும் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு மற்றும் பொது இடத்தில் மக்களுக்கு இடையூறாக தலைவர்கள் சிலை வைக்க கூடாது என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்பு ஆகியவற்றை காரணம் காட்டி சிலை அமைக்க காவல்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, ஜனநாயக முறைப்படி சட்டமேதையின் உருவச்சிலை அமைக்க வழிவகை செய்ய வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...