டிசம்பர் 08
ஆர்.கே.நகர் தேர்தல் தமிழக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தலாக அமையும் என சுயேட்சை வேட்பாளரும் அஇ அதிமுகவின் நீக்கப்பட்ட துணை பொது செயலாளருமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தேர்தலில், சுயேட்சையாக களமிறங்கியுள்ள டி.டி.வி.தினகரனுக்கு ‘பிரஷர் குக்கர்’ சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவரும் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், ஆர்.கே. நகரில் டிடிவி தினகரன் பேசுகையில், ஆர்.கே.நகர் தேர்தல், தமிழக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் தேர்தலாக அமையும். மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சனையில் தமிழக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுகிறது. இவ்வாறு கூறினார்.