நாளை முதல் இருவழிப் பாதையாகிறது புரூக்பாண்ட் சாலை

கோவை, டிசம்பர் 8

நாளை முதல் கோவை புரூக் பாண்ட் சாலை இருவழிப் பாதையாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

கோவை அவினாசி சாலை மேம்பாலத்தில் இருந்து வடகோவை மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்த புரூக்பாண்ட் சாலை ஒரு வழிப்பதையாக மாற்றப்பட்டது. 

இந்த மாற்றத்தால் அவினாசி சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் பூ மார்க்கெட் வழியாக சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைய வேண்டி இருந்தது. இதனால் பூ மார்க்கெட் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து, புரூக்பாண்ட் சாலை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது. 

இது குறித்து போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் S.முருகன் கூறுகையில், புரூக்பாண்ட் சாலையை இருவழிப்பாதையாக மாற்றுவது குறித்து மாநகர காவல்துறை ஆணையர் K.பெரியய்யா மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் ஆகியோர் நேற்று மாலை அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சாலை சீரமைக்கப்பட்டது. செண்டர் மீடியன் கற்களை சாலைகளின் நடுவே அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.



நாளை காலை 7 மணி முதல் புரூக்பாண்ட் சாலை இருவழிப்பாதையாக மாற்றி திறக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

இந்த புரூக்பாண்ட் சாலை இருவழிப்பாதையாக மற்றப்படும் போது பூ மார்க்கெட் பகுதியிப் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...