ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் : நடிகர் விஷால், ஜெ. தீபாவின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

டிசம்பர் 05

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா மற்றும் நடிகர் விஷால் ஆகியோரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர்  மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அன்று மாலை வரை 30 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் கடைசி நாளான நேற்று மேலும் சிலர் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று மட்டும் 145 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், தேர்தல் அலுவலக அதிகாரிகளே திணறிவிட்டனர். இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது. முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி. தினகரன் ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனின் படிவம் B-ல் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. விஷால் வேட்புமனுவில் உறுதிமொழி, கணக்கு விவரங்கள் முறையாக இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எதிர்ப்பு தெரிவித்ததால், நடிகர் விஷாலின் வேட்புமனு பரிசீலனையில் இழுபறி ஏற்பட்டது. தொகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும். இதில் முன்மொழியாத 2 நபர்கள் பெயர் இடம் பெற்றுள்ளன. இது உண்மைக்கு புறம்பானது என கண்டறியப்பட்டது. இதனையடுத்து நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். 

இதனிடையே, சொத்து மற்றும் வழக்கு விபரங்கள் அடங்கிய படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாததால் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவின் வேட்புமனுவை, தேர்தல் அதிகாரி நிராகரித்தார். ஏற்கனவே நேற்று பேட்டி அளித்து தீபா  தனது வேட்புமனு நிராகரிக்கப்படும் எனக் கூறி இருந்தார்.

இது குறித்து இன்று  தீபா பேட்டி அளிக்கையில், நான் ஏற்கனவே இது குறித்து கூறி இருந்தேன். எனக்குப் போன் மூலம் மிரட்டல் வந்தது. நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்யாதீர்கள், செய்தாலும் நிராகரிக்கப்படும் என 2 நாட்களுக்கு முன்னரே என்னிடம் கூறினார்கள். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போதே எனக்கு பல்வேறு இடையூறுகள் இருந்தது. எனக் கூறினார்

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு : ஆர்.கே. நகர் தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 2,28,234 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், 1,10,903 ஆண்களும், 1,17,232 பெண்களும் உள்ளனர். 3-ம் பாலினத்தினர் 99 பேர் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...