திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய கோவை 23-வது வார்டு மக்கள்

கோவை, டிசம்பர் 04

கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய வார்டு என்ற பெருமையை 23-வது வார்டு மக்கள் பெற்றுள்ளனர். 

கடந்த 2013 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி தினத்தன்று ”ஷுன்யா ஜுரோ கழிவு மேலாண்மை” என்ற திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் கோவை மாநகராட்சியின் 23-வது வார்டு பகுதியில் தொடங்கப்பட்டது. இந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நிறுவனங்களின் ஒத்துழைப்பினால், 100 சதவீதம் திடக்கழிவுகள் இல்லாப் பகுதியாக இந்த வார்டு உருவெடுத்துள்ளது. 



இதன்மூலம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய வார்டாக கோவை மாநகராட்சியின் 23-வது வார்டு சாதனைப் படைத்துள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் சிறுதுளி போன்ற தொண்டு நிறுவனங்களின் உதவியின் மூலமாக முதல் முறையாக மாநகராட்சியின் வார்டில் இத்திட்டம் வெற்றியடைந்தது. இதன்மூலம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவதில் மற்ற வார்டுகளுக்கு, 23-வது மிகப் பெரிய எடுத்துக்காட்டாக உள்ளது. 

இத்திட்டம் குறித்து கோவை மாநகராட்சி மேற்கு மண்டலச் சுகாதாரத்துறை அதிகாரி ஆர். ராதாகிருஷ்ணன் கூறுகையில், கழிவுகளின் தரம் கண்டு பிரிப்பது, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்கு முக்கியமானதாகும். மக்களின் ஒத்துழைப்பு இல்லையெனில், இத்திட்டம் வெற்றியடைந்திருக்காது. பல்வேறு வார்டுகளில் கழிவுகளைப் பிரித்தெடுப்பதற்கான வசதிகள் இருந்தும், சரியான விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் இத்திட்டம் கிடப்பில் உள்ளது. 23-வது வார்டில் ”ஷுன்யா ஜுரோ” திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆரம்பக் காலத்தில், ஒத்துழைப்பின்மை போன்ற பல்வேறு இன்னல்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.



இத்திட்டத்தைச் செயல்படுத்தாத வீடுகளுக்கு அபராதமாக குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. ”ஷுன்யா ஜுரோ” திட்டத்தின் பயன்கள் குறித்து, மாநகராட்சி சார்பில் கல்வி மற்றும் விழிப்புணர்வுப் பேரணிகள் மூலம் பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். கல்வியின் மூலம், மக்கும், மக்காத குப்பைகளை பொதுமக்களால் எளிதில் வகைப்படுத்த முடியும். 

மக்கும் குப்பைகள் பயிர்களுக்கு உரமாகவும், மக்காத குப்பைகளை ஐடிசி நிறுவனங்களின் காகித ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வெள்ளலூரில் உள்ள குப்பைக் கிடங்கில், கழிவுகளின் தன்மையறிந்து பிரிக்கப்படுகிறது. மக்காத கழிவுகளை, மறுசுழற்சிக்காக கவுண்டம்பாளையம் உலர் கழிவு ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

இதேபோல, சமூக ஆர்வலர் எஸ்.பி. தியாகராஜன் கூறுகையில், அனைத்துக் கழிவுகளும், வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, கழிவுகளின் தரம் கண்டு பிரித்து அனுப்பப்படுகிறது. ஜுரோ கழிவுகள் திட்டத்தை அனைத்து வார்டுகளிலும் கட்டாயம் என்ற முறையை விரைவில் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவதில் மற்ற வார்டுகளுக்கு, 23-வது மிகப் பெரிய முன் உதாரணம் எனச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...