கோவை, டிசம்பர் 4
திட்டப்பணிக்கு எனத் தனியாக பணியாளர்களை நியமித்தல் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மண்டல நில அளவை அலுவலர்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்தின் போது, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாகத் துணை ஆய்வாளர் தேர்வில் உள்ள குறைகளை களையவும், திட்டப்பணிக்கு எனத் தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மாவட்ட அளவில் பணியாளர்களின் பணிமாறுதல் தொடர்பாக இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவு, ஊழியர்களிடம் குழப்பத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும், உயர்பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதால் நிர்வாகமும், ஊழியர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள், அனைத்து நில அளவைக் களப்பணியாளர்களின் நாட்குறிப்புகளை எளிமைப்படுத்திடவும், நிலஅளவையர் அனைவருக்கும் பவானிசாகர் நிர்வாகப் பயிற்சியினை வழங்கி களப்பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பயணப்படி ஊதியத்துடன் பட்டியலிட்டு வழங்கிட வலியுத்தியும், கோஷங்களை எழுப்பினர்.