ஆர்.கே. நகர் தேர்தல் : பாஜக வேட்பாளராக கரு. நாகராஜன் அறிவிப்பு

டிசம்பர் 02

ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் மாநில செயலர் கரு. நாகராஜன் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஓராண்டுக்கு பிறகு வருகிற 21ம் தேதி நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க சார்பில் தேர்தலில் போட்டியிடக் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்புமனுவும் தாக்கல் செய்து விட்டனர். முன்னதாக, பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளர் கங்கை அமரன் தற்போது போட்டியிட மறுப்பதால் புதிய வேட்பாளரைக் களமிறக்க அக்கட்சித் திட்டமிட்டு வந்தது. 

ஆர்.கே. நகர் தேர்தலில் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜனே போட்டியிடுவார் எனத் தகவல் வெளியாகி வந்தன. எம்.என்.ராஜா, கரு.நாகராஜன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆர்.கே. நகரில் பாஜக சார்பில் மாநில செயலர் கரு.நாகராஜன் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்ய 4-ம் தேதி கடைசி நாள் என்பதால், அன்றைய தினம் அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார். 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...