தொடர் கனமழையால் முழுக் கொள்ளளவை எட்டும் கோவை அணைகள்

கோவை, டிசம்பர் 02

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், சிறுவாணி, பில்லூர், ஆழியார் அணைகள், அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 

ஒகி புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், கோவை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. 

மாதம்பட்டி, பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கோவையின் நீர் ஆதரமாக உள்ள சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி, 55 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 52.32 அடியாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகச் சிறுவாணி பகுதியில் 26 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. 

இதேபோல, 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு 2,466 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆழியார் அணை 120 அடி உயரம் கொண்டது. தற்போது, பெய்து வரும் கனமழையால், 85.90 அடி உயரம் எட்டியுள்ளது. அணையின் நீர்வரத்து 883 கனஅடியாக உள்ளது. 

இதனிடையே, தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தால், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழை, தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அணைகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...