நவம்பர் 30
ஒகி புயல் காரணமாக பல இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே 2 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த மண்டலமாகி அடுத்த 36 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறி புயலாக தீவிரம் அடைந்துள்ளது. தற்போது 70 கி.மீ. தொலைவில் குமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. புயல் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சரிந்தன. நாகர்கோவிலில் மின்சார டிரான்ஸ்பார்மரும் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சரிந்து விழுந்தது.
மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. வீடுகளும் சேதமடைந்தது. குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்டத்தின் உட்பகுதிகள் மற்றும் கிராமங்களுக்கு போக்குவரத்தும் சீராக நடைபெறவில்லை.
ஓகி புயல் காரணமாக 4 பேர் பலியாகி உள்ளனர். கன்னியாகுமரியில் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது புயல் விலகிச் சென்று உள்ளது. நெல்லை, குமரி மாவட்டங்களில் ஒகி புயலால் ஏற்படும் மின்விநியோக பாதிப்புகளை உடனே சீரமைக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்பகிர்மான கழகம் ஆணைப் பிறப்பித்து உள்ளது.
இதுகுறித்து டுவிட்டரில் கமல்ஹாசன் விடுத்துள்ள பதிவில், மழையில் மிதக்கிறது கன்னியாகுமரி மாவட்டம். இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் எனக் கூறி உள்ளார்.