அரசு சாரா மருத்துவர்களுக்கு பணி நியமனம் வழங்கிய விவகாரம் : மருத்துவ மாணவர்கள் வாயில் பிளாஸ்டர் அணிந்து போராட்டம்

கோவை, நவம்பர் 30

மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிய அரசுசாரா மருத்துவர்களை நேரடியாக அரசு மருத்துவக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் வாயில் பிளாஸ்டர் அணிந்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிய அரசுசாரா மருத்துவர்களை நேரடியாக தேர்வை செய்ததின் மூலம், அனுபவமுள்ள அரசு மருத்துவர்களுக்கும் , அரசு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் கிடக்க வேண்டிய வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

முறையாக கலந்தாய்வு நடத்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட வேண்டிய நிலையில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நேர்முகத் தேர்வு நடத்தி அரசு சாரா மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரி முதுகலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோவையில் நேற்று தொடங்கிய இந்த போராட்டத்தில் அரசு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



இந்த நிலையில், அரசுடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கப்பெறாததால் இன்று நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் வாயில் பிளாஸ்டர் அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...