கோவை, நவம்பர்.24
கோவையில் பழங்கால சிலைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீளமேட்டை அடுத்த பிருந்தாவன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பழங்கால சிலைகள் மற்றும் அரிய பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பீளமேடு போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று இரவு அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு இருந்த ஐம்பொன் சிலைகளான சரஸ்வதி, நாகதேவி சிலைகளைக் பறிமுதல் செய்தனர்.

மேலும், செம்பு வளையல்கள், செம்பு பாத்திரங்கள் மற்றும் 2 சங்கு உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்த 2 சூட்கேஸ்களையும் மீட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக, பீளமேடு பகுதியைச் சேர்ந்த பசந்திரசேகரன் (48),பாலக்காடு மாவட்டம் வடக்காஞ்சேரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (34) மற்றும் இடையர்பாளையம் சீனிவாசநகரைச் சேர்ந்த ஜெயபாண்டியன் (39) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கைதான மூன்று பேரும் சிலைகள் மற்றும் பாரம்பரிய பொருட்கள் அனைத்தும் தங்கள் முன்னோர்கள் பயன்படுத்தியதாகவும், அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, கைதான மூன்று பேரையும் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்துச்சென்றனர்.