யு.பி.எஸ்.சி தேர்வில் காப்பியடித்த விவகாரம் : ஐ.பி.எஸ் அதிகாரி சபீர் கரீமுக்கு நிபந்தனை ஜாமின்

கோவை, நவம்பர் 23

யு.பி.எஸ்.சி தேர்வில் காப்பியடித்த விவகாரத்தில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சபீர் கரீம் நிபந்தனை ஜாமினில் இன்று விடுவிக்கப்பட்டார். 

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யு.பி.எஸ்.சி தேர்வு நடைபெற்றது. ஐ.ஏ.எஸ் பணிக்கான இந்தத் தேர்வில் ஐ.பி.எஸ் அதிகாரியான சபீர் கரீம் கலந்து கொண்டு தேர்வு எழுதினார். அப்போது, நூதனமுறையில் காப்பி அடித்ததாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தேர்வில் காப்பியடிக்க உதவியதாக அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

இந்த நிலையில், தன்னையும் ஜாமினில் விடுவிக்க வேண்டும் என சபீர் கரீம் மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமின் அளித்தது. இதனையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபீர் கரீம் இன்று விடுவிக்கப்பட்டார்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...