முதன் முறையாக தமிழகத்தில் ரூ.12,000 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைத் திட்டம்

கோவை, நவம்பர் 23  

இந்தியாவில் முதன் முறையாக தமிழகத்தில் ரூ.12,000 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நெடுஞ்சாலை மற்றும் துறைமுகத் திட்டங்கள் தொடர்பாக சென்னையில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரிஇன்று  ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று துறைச் சார்ந்த திட்டங்கள் தொடர்பான அறிக்கையை வழங்கினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், தமிழகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலை மற்றும் துறைமுகங்கள் தொடர்பாக 81 திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் ரூ.12,000  கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும். மேலும், சென்னையில் ரூ.5,000 கோடி செலவில் பறக்கும் சாலை அமைக்கப்படும். 

இந்தியாவில் சாலை விபத்துகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. விபத்து ஏற்படக்கூடிய 61 இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் ரூ.2,300 கோடி செலவில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க கோதாவரி ஆற்றிலிருந்து வீணாகக் கடலில் கலக்கும் 3,000 டிஎம்சி தண்ணீரை, கிருஷ்ணா மற்றும் காவிரி ஆற்றுக்கு திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்படும். எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...