முறையான ஊதியம் வழங்கக் கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கோவை, நவம்பர் 23

ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப் போன்றே இணையான ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி அலுவலகங்களில் 12,524 ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை அந்தந்த மாவட்ட கருவூலங்கள் மூலமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன்படி, கோவை மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இன்று பணிக்கு வந்த ஊழியர்கள், கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு பணிகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊரக வளர்ச்சித்துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 



இதனிடையே, எங்களது இந்தக் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...