கோவை, நவம்பர் 23
கோவையில் செயல்பட்டு வரும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தொடர்ந்து செயல்படும் எனவும், வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் எனவும் மண்டல பொறுப்பு அலுவலர் திரு. கே. தங்கம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், உப்பிலிபாளையத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்ட மக்களுக்காக மண்டல பாஸ்போர்ட் அலுவலகமும், அவிநாசி சாலை, சிட்ரா அருகில் பாஸ்போர்ட் சேவை மையமும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மண்டல அலுவலகத்தை சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. சில ஊடகங்கள் வாயிலாகச் செய்திகளும் வெளியிடப்பட்டன.
மலப்புரம் மண்டல அலுவலகம், கோழிக்கோடு மண்டல அலுவலகத்துடன் அண்மையில் இணைக்கப்பட்டதைப் போலவே தமிழகத்தில் கோவை மண்டலத்தை சென்னையுடனும், திருச்சி மண்டலத்தை மதுரையுடனும் இணைப்பதற்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் முயற்சி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், கோவை மண்டல அலுவலகம் சார்பில் அதன் பொறுப்பு அலுவலர் கே.தங்கம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை சென்னை அலுவலகத்துடன் இணைப்பது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே கோவையில் பாஸ்போர்ட் மண்டல அலுவலகம், சேவை மையம் ஆகியவை தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.