கோவை, நவம்பர் 15
தமிழக அமைச்சர்கள் மீது லஞ்ச ஊழல் புகார்கள் இருப்பதை பாஜகவினால் உணர முடிகிறது என அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை காந்திபுரம் அருகே திருவள்ளுவர் நகர் பகுதியில் பழுதடைந்த சாலையினை சீரமைக்கும் போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர். பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில், அக்கட்சியினர் சிமெண்ட் கலவையை கொண்டு சாலையை சரி செய்தனர்.

அப்போது, வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் சாலை பாரமரிப்பு பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சனைகளான சாலை வசதி, குடிநீர் பிரச்சணைகளில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு ஒதுக்கும் நிதி முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிறைந்து இருக்கிறது. மேலும், தமிழக அமைச்சர்கள் மீது லஞ்ச, ஊழல் புகார்கள் இருப்பதை பாஜகவினால் உணர முடிகிறது. ஊழலால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.