கோவை, நவம்பர் 14
திரு. கே. பெரியய்யா, கோவை காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை காவல் ஆணையர் அமல்ராஜ், திருச்சி காவல் ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை, சென்னை, திருச்சி உள்ளிட்ட 7 மாவட்ட ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கோவை காவல் ஆணையராக இருந்த திரு. அமல்ராஜ், திருச்சி மாவட்ட காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட கூடுதல் ஆணையர் திரு. கே. பெரியய்யா, கோவை காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல, திருச்சி காவல் ஆணையர் திரு. ஏ. அருண் சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையராகவும், காவல்துறை பொது விநியோக துறையில் ஐ.ஜி.,யாக இருந்த வெங்கட்ராமன் நிர்வாகத்துறை ஐ.ஜி.,யாகவும், நிர்வாக பிரிவில் ஐ.ஜி.,யாக இருந்த தினகரன் ஸ்தாபன ஐ.ஜி.,யாகவும், சென்னை பயிற்சி கல்லூரி ஐ.ஜி.,யாக சோனல்மிஸ்ரா, அமலாக்கத்துறை கண்காணிப்பாளராக அமானத் மாற்றப்பட்டுள்ளனர்.