கோவை, நவம்பர் 13
உலக சர்க்கரை தினத்தையொட்டி நாளை கோவை ராமநாதபுரம் அருகே சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
உலகம் முழுவதும் சர்வதேச சர்க்கரை தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,ஆர்ய வைத்திய பார்மஸியின் ஒரு அங்கமான ஏவிபி ஆராய்ச்சி கழகம் சார்பில் ராமநாதபுரம், ஓலம்பஸ் பகுதியில் உள்ள தன்வந்திரி கோவில் வளாகத்தில் நடக்கிறது. இந்த முகாமில், சர்க்கரை நோயில் இருந்து எவ்வாறு காத்துக்கொள்வது என்பது குறித்த இலவச ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

மேலும், குறைந்த கட்டணத்தில் சர்க்கரை அளவை குறைப்பதற்கான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. சர்க்கரை நோயை பொறுத்த வரையில், ஆரம்ப நிலையை கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். இல்லையெனில், கண்பார்வை குறைபாடுகள், உறுப்புகள் செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர் அருண் தெரிவித்துள்ளார்.