"உதவுங்கள், இல்லை என்னை கருணை கொலை செய்யுங்கள்"

கோவை, நவம்பர் 13

விபத்தில் பாதிக்கபட்டு வாழ்வாதாரம் கேள்விகுறியாக உள்ளதால் தனக்கு மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும் அல்லது தன்னை கருணை கொலை செய்ய கோரி சோமனூரை சேர்ந்தவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.



கோவையை அடுத்து சோமனூர் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ்(51). தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு விபத்து ஏற்பட்டதில் முதுகுதண்டு பாதிக்கபட்டு இடுப்பிற்கு கீழ் செயல்படாமல் அவதிபட்டு வந்துள்ளார். இவருக்கு குழந்தை தெரேசா என்ற மனைவியும் ஆணிஸ் வெனிட்டா(18) கல்லூரியில் பயிலும் மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி குழந்தை தெரேசாவிற்கும் ஒரு விபத்து ஏற்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். இவர்கள் இருவரையும் கவனிக்க வேண்டிய நிலையில் ஆணிஸ் வெனிட்டா கல்லூரி படிப்பை தொடர முடியாமலும் தங்களை கவனித்து கொள்ள வேண்டி இருப்பதால் வேலைக்கும் செல்ல முடியாத சூழல் உள்ளதாக கூறினார்.

மேலும், வருமானமின்றி சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையில் அருகில் உள்ளவர்கள் தங்களுக்கு ஒரு வேளை உணவளித்து வருகின்றனர் எனவும் மாதம் 2000 மருத்துவ செலவு ஆவதால் தங்களால் அதை கூட செலவு செய்ய முடியாத நிலை உள்ளதாக வர்கீஸ் தெரிவித்தார். இதனால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கபட்டு உள்ளதாக கூறியவர் மாற்று திறனாளிகள் அலுவலகத்தில் உதவி கோரி மனு அளித்து 3 வருடங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியவர் தனக்கு மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும் அல்லது தன்னை கருணை கொலை செய்ய அனுமதி வழங்கிடகோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...