கோவை, நவம்பர் 11
போலீஸ் பாய்ஸ் கிளப்பைச் சேர்ந்த 9 வயது முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது.

கோயம்புத்துார் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 மற்றும் ஏஆர்சி குழுமம், ஷிவா டெக்ஸ் யார்ன் ஆகியவற்றின் சார்பில் கோவை ஈச்சனாரியில் உள்ள லட்சுமி கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற கோவை மருத்துவர்கள் பங்கேற்ற இந்த முகாமில், 9–15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பொதுவான மருத்துவ பரிசோதனைகள், பல், கண் போன்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

மருத்துவப் பரிசோதனைக்குப்பின் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் படங்கள் காண்பிக்கப்பட்டன. காலை மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டன.

இதில், கோவை காவல்துறை, சட்டம், ஒழுங்குத் துணை ஆணையர் லட்சுமி, கவுரவ விருந்தினராக பங்கேற்றார். ரவுண்ட் டேபிள் இன்டியாவின் ஏரியா 7-ன் திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், இளங்கோ ஆகியோர் கவுரவ விருந்தினராக பங்கேற்றனர்.
குழந்தைகளுக்கு இந்த மருத்துவ முகாம், சுகாதாரத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் மட்டுமின்றி திரைப்படமும் கண்டு களித்து, சிறந்த பொழுதுபோக்காகவும் அமைந்தது.