சிட் கம்பெனியில் முதலீடு செய்தோர் போலீஸ் ஆபீஸ் முற்றுகை

திரிபுரா சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் கொடுத்தும் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலைகழிப்பதாக கூறி ஆட்சியர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

கோவை திருச்சி சாலை, சத்தி சாலை, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் திரிபுரா சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் மாதம், வாரம், தினசரி என்ற அடிப்படையில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பணம் திருப்பி தருவதில் கால தாமதம் செய்து வந்த அந்நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு காசோலை வழங்கியுள்ளது. ஆனால் அந்நிறுவனத்தின் வங்கி கணக்கில் பணம் இல்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்ததாகவும், அதன்பின்னர் திரிபுரா சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் கிளைகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த திங்கட்கிழமை புகார் அளித்தனர். அப்புகாரில் 2 கோடி ரூபாய் அளவிற்கு திரிபுரா சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்திருப்பதாக தெரிவித்தனர். அந்நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை எனவும், இது தொடர்பாக கேட்டால் தொடர்ச்சியாக அலைகழிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டு இருபது நிமிடங்களுக்கு மேலாக சாலையை மறித்து நின்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் வாகனங்கள் வெளியேயும் உள்ளேயும், செல்ல முடியாமல் நின்றது. இருபது நிமிடத்திற்கு பிறகு வந்த காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறி பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.



Newsletter

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...