பணமதிப்பிழப்பு ஒரு பெரும் வெற்றி: வானதி ஸ்ரீனிவாசன்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கியில் வரிசையின் நின்று உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் எந்த ஏற்பாடும் இல்லை எனவும் இது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என பா.ஜ.க மாநில செயலாளர் வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



கோவை காந்திபுரம் பா.ஜ.க அலுவலகத்தில் அவர்இன்று செய்தியாளகளை சந்தித்தார். அப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக 17.2 லட்சம் சந்தேகத்திற்கிடமான பணபரிவத்தனைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 3.68 லட்சம் கோடி பணம் சந்தேகத்திற்குரியது என கண்டறியப்பட்டு இருப்பதாகவும், 7.62 லட்சம் கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது எனவும், 1626 கோடி பெறுமானமுள்ள பினாமி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விபரங்களை வெளியிட்ட அவர், காஷ்மீரில் 75 சதவீதம் கல்லெறியும் சம்பவங்கள் குறைந்து இருப்பதாகவும் தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், ஜி.எஸ்.டியாலும் சிறு, குறு நிறுவங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை களைய நடவடிக்கைகள் எடுக்கப்டுவதாகவும் அவர் தெரிவித்தார். 99 சதவீதம் பணம் திரும்பி வந்திருந்தாலும் அதில் கணக்கில் காட்டப்படாமல் இருக்கும் குறித்து விசாரணை நடத்தப்படுகின்றது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் வரிசையில் நின்று உயிரிழந்த பொதுமக்களுக்கு நிவாரணம் கொடுப்பது தொடர்பாக மத்திய அரசிடம் ஏற்பாடு எதுவும் இல்லை எனவும் இது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்துவதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...