கோவை, நவம்பர்.5: இந்துக்களை தீவிரவாதிகள் என்று சொன்னால் கமலஹாசன் நாட்டுக்குள்ளேயே இருக்க முடியாது என்று பாரத்சேனா அமைப்பினர் காட்டமாக அறிவித்தனர்.
நடிகர் கமலஹாசன் சமீபகாலமாக அரசியலில் முழு மூச்சுடன் இறங்கியுள்ளார்.
அவ்வப்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழலை தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து வந்த கமலஹாசன் சமீபத்தில் வாரப்பத்திரிக்கையில் கட்டுரை ஒன்றை எழுதி வருகிறார்.
அதில், 'இந்து தீவிரவாதம் இல்லை என்று இனி மேல் சொல்ல முடியாது' என்ற வார்த்தையை பயன்படுத்தி கட்டுரையை எழுதியுள்ளார். இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதனிடயே கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு பாரத் சேனா அமைப்பைச் சர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கமலுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார். தொடர்ந்து அந்த அமைப்பைச்சேர்ந்த மணிகண்டன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில் நடிகர் கமலஹாசன் இந்து மதத்தை இழிவுபடுத்தியுள்ளார். கேரளாவில் இந்துக்கள் பலர் கொல்லப்படுகின்றனர். அங்கு உள்ள சில முக்கிய நபர்களுடன் தொடர்பு வைத்துள்ள கமலஹாசன் இங்கும் இந்துக்களை எதிர்த்து வருகிறார்.
இந்துக்கள் அமைதியாக இருக்கின்றனர். இல்லையென்றால் கமல் இந்த நாட்டுக்குள்ளேயே இருக்க முடியாது. இதேபோல், கமல் பேசினால் அவரது திரைப்படங்களை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கமாட்டோம்' என்றார்.