அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிக்க ஆதார் எண் கட்டாயம்..? - குடியரசுத் தலைவருக்கு வலியுறுத்தி இணையதள கையெழுத்துப் பிரச்சாரம்

கோவை, நவம்பர் 4: நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க ஆதார் எண் கட்டாயம் என்ற சட்டத்தை இயற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் கையெழுத்துப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

திரு.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்று கறுப்புப் பணம் ஒழிப்பதாகும். இதன் நடவடிக்கைகளாக, கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய ரூ.500, ரூ1000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. மேலும், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்த மத்திய அரசு, வங்கிக் கணக்கு மற்றும் தொலைபேசி எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலமாக, அரசுக்கு தெரியாமல், யாரும் பணப்பரிமாற்றம் செய்ய முடியாது. 

இந்த நிலையில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை அளிக்க ஆதார் எண் கட்டாயப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்து குரல் எழுந்துள்ளது. கறுப்புப் பண நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசு, ஏன் இதில் கவனம் செலுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

ஆதார் எண் கட்டாயம் என சட்டம் கொண்டு வந்துவிட்டால், இனிவரும் காலங்களில் ரொக்கமாகப் பணப்பரிமாற்றம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி யாரும் கேள்விக் கனைகளை முன்வைக்க முடியாது . அவர்களுக்கான ஒரே பதில், மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான். பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் பிரதமர் மோடி மற்றும் அவரது கட்சியான பா.ஜ.க, மற்றக் கட்சிகளுக்கு முன் உதாரணமாக, நன்கொடைகளை, டிஜிட்டல்மயமாக்கல் மூலம் பெற்றால் சிறப்பான ஒன்றாக இருக்கும். 

இந்த நிலையில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க ஆதார் எண் கட்டாயம் என்ற சட்டத்தை இயற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் கையெழுத்துப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. 

பணமதிப்புழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8-ம் தேதி கறுப்புப் பணத் தடுப்பு தினம் அனுசரிக்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் திரு.அருண்ஜேட்லி அண்மையில் அறிவித்திருந்தார். அன்றைய தினத்திற்கு முந்தைய தினம் சென்றடையுமாறு, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க ஆதார் எண் கட்டாயம் என்பதை வலியுறுத்தி குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத்கோவிந்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

இந்த இணையதளக் கையெழுத்து பிரச்சாரமானது, நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது. தற்போது வரை 2,600-க்கும் மேற்பட்டோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர். இன்னும் 4 நாட்கள் எஞ்சியிருப்பதால், உறுதியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க ஆதார் எண் கட்டாயம் என்பற்கு பல்வேறு மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதால், குடியரசுத் தலைவர் உறுதியாக ஏதேனும் நடவடிக்கை எடுப்பார் என நம்பப்படுகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...