கோவை, நவம்பர் 3: கோவை மாவட்டத்தில் தலைவிரித்து ஆடும் கந்து வட்டி கொடுமைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் துறை ஆணையரிடம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
இது தொடர்பாக சங்கத்தின் மாநில துணை தலைவர் ஏ.கே.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் விவசாயத் தொழிலை நம்பி பல விவசாயிகள், சிறு வணிகர்கள் உள்ளனர். விளைச்சலின் போதும் வியாபரத்தின் போதும் அவர்களை நாடும் கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், நயமாக பேசி பணத்தை கொடுக்கின்றனர்.

தொழிலில் நட்டம் ஏற்படும் போது குறிப்பிட்ட நபர்களால் உடனடியாக பணத்தை திரும்பச்செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் கந்து வட்டி கும்பல் அடியாட்களை வைத்து மிரட்டுவதோடு தகாதவார்த்தைகளில் பேசுகின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர்.
இது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டு இன்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்.
மேலும், டாஸ்மாக் கடைகள் தவிர சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்க எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்' என்றார்.