கோவை, நவம்பர் 2 : கோவை மாவட்டத்தில் படைக்கலன் வைத்திருப்பவர்கள் அதன் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான மனுவை டிசம்பர் 31-ம் தேதி வரை அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தற்காப்பு, வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு, பயிர் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பலவகை பிரிவுகளின் கீழ் ஏற்கனவே படைக்கலன் உரிமம் பெற்றவர்களுக்கு, கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் ஆணையராலும், இதனைத் தவிர்த்த மாநகரத்தின் ஏனைய பகுதிகளில் வசித்து வருபவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் படைக்கலன் உரிமங்கள் புதுப்பித்து வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வரும் 31.12.2017 அன்றுடன் படைக்கலன் உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்து, ஜனவரி 01, 2018-ம் ஆண்டு முதல் 31.12.2020 வரை முடியவுள்ள 3 ஆண்டுக் காலத்திற்கு படைக்கலன் உரிமத்தினை புதுப்பிக்க உள்ளோரிடம் இருந்து, அது தொடர்பான மனுக்களானது நேற்று (நவம்.,01) முதல் 31.12.2017 அன்று மாலை 5.45 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளப்படுகின்றன..
மனுவை நேரிடையாகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். தனிநபர் பெயரில் படைக்கலன் உரிமம் பெற்றோர் படிவம் ஏ3-யினையும், நிறுவனத்தின் பெயரில் படைக்கலன் உரிமம் பெற்றோர் படிவம் ஏ4-யினையும் பூர்த்தி செய்து, அவற்றுடன், படைக்கலன் உரிமம் புதுப்பித்தல் கட்டணமாக ரூ.1,500 தொகையினை ஏதேனுமொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் செலுத்தப்பட்டதன் செலுத்துச் சீட்டின் அசல், ஆதார் அட்டை நகல், பான் கார்டு நகல் மற்றும் புகைப்படம் ஒன்று ஆகியவற்றை இணைத்தும் மனு செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், படைக்கலன் உரிமம் புதுப்பித்தல் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்காதவர்கள், மார்ச் 31, 2018 ஆம் ஆண்டு அன்று மேற்தெரிவிக்கப்பட்ட ஆவணங்களுடன், புதுப்பித்தல் கட்டணத் தொகை ரூ.1,500 மற்றும் தாமத மனு கட்டணமாக ரூ.1000 தொகையினை ஏதேனுமொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் செலுத்தப்பட்டதன் செலுத்துச் சீட்டின் அசல் சீட்டுடன் இணைத்து நேரிலோ அல்லது பதிவு செய்யப்பட்ட தபால் மூலமாகவோ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
இறுதி காலக்கெடுவிற்குள் செய்யப்படாத படைக்கலன் உரிமங்கள் இனம் கண்டறியப்பட்டு, அவை உடனே ரத்து செய்யப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது