கோவை, நவம்பர் 2: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தக்கோரி மாவட்ட ஆட்சியர் திரு.டி.என். ஹரிஹரனிடம் தொழிற்சங்கங்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், தனிமனிதனின் குறைந்த பட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் என நிர்ணயம் செய்யவும், தொழிலாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதைத் தடுக்கவும், அந்நிய நேரடி மூலதனத்தைப் பாதுகாப்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அனுமதிக்காமல் இருக்க நடவடிக்கை வேண்டுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசிடம் மாவட்ட ஆட்சியர் எடுத்துச்சொல்லி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ ஹெச்.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்களும் மத்திய அரசின், தொழிலாளர் மக்கள் விரோத கொள்கைகளை முறியடிக்க நவம்பர் 9,10 மற்றும் 11-ஆம் தேதிகளில் லட்சக்கணக்கான உழைப்பாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அந்தப் போராட்டத்தில் கோவையிலிருந்து இரண்டாயிரம் தொழிலாளர்கள் கலந்துகொள்ள இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மக்களுக்கு எதிராகவும், பெரும் பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சாதகமான மத்திய அரசை எதிர்த்து நடைபெறும் இந்த நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.