வால்பாறை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள்

கோவை, நவம்பர் 1: வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணினி மற்றும் சைக்கிள் வழங்கப்பட்டது.



வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணினி, சைக்கிள் வழங்கும் விழா வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் நடைபெற்றது. இதில், 450 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியும், 440 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிளும் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், நகரக் கழக செயலாளர் மயில்கணேஷ், பொன்கணேஷ், வியாபார சங்கத் தலைவர் ஜெபராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் சிவன்ராஜ் வரவேற்புரையாற்றினார். விழாவின் முடிவில் வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராபின் நன்றியுரையாற்றினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...