கோவையில் அடுத்தடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் திருட்டு: மர்ம நபர்கள் துணிகரம்

கோவை, அக்டோபர்.31: கோவை மாநகர் பகுதியில் அடுத்தடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

வெரைட்டி ஹால் பகுதியை அடுத்த தாமஸ் வீதி பகுதியில் ஏராளமான மொத்த கொள்முதல் விற்பனை நிலையங்கள் உள்ளன. இங்கு, அழகு சாதன பொருட்கள், மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யபட்டு வருகின்றன.



இப்பகுதியில், பேன்சி கடை நடத்தி வருபவர் மங்காரவ் (35). பணி முடிந்து நேற்று வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார். அப்போது, கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இவரது கடை அருகிலேயே புத்தகக் கடை நடத்தி வருபவர் பிரேம் சிங் (37). இவரது கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த ரூ.6 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மேலும், அடுத்தடுத்து இருந்த 3-க்கும் மேற்பட்ட கடைகளில் மர்ம நபர்கள் கை வரிசையை காட்டியுள்ளனர். கொள்ளைபோன பணம் மற்றும் பொருட்கள் தொடர்பாக வெரைட்டி ஹால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் மாநகரின் முக்கியப் பகுதியில் அடுத்தடுத்த கடைகளில் கொள்ளை போன சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...