கோவை, அக்டோபர் 31: கடந்த 2015-ம் ஆண்டு மதுக்கரை அருகே அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்காத பேருந்தை கோவை முதலாவது சார்பு நீதிமன்றம் ஜப்தி செய்தது.

மதுக்கரை அருகேயுள்ள ஒக்கிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த கிட்டான் என்பவர் கடந்த 2005-ம் ஆண்டு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து மோதி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அரசு பேருந்து மோதி பலியான கிட்டான் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சத்து 86 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது. இதனை அரசு போக்குவரத்து கழகம் இதுவரை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது.
இந்த நிலையில், உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரக்கோரி கிட்டானின் மனைவி பாப்பாத்தி கோவை முதலாவது சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 7.5 சதவீத வட்டியுடன் ரூ. 5 லட்சத்து 11 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டும், அதை போக்குவரத்து கழகம் வழங்காததால், பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி, அதிகாரிகள், அரசுப் பேருந்தை பறிமுதல் செய்தனர்.