டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து கோவையில் தமிழக அரசு முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு

கோவை, அக்டோபர் 29: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், டெங்கு ஒழிப்பு பணிகள் தொடர்பாக வருவாய் துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 29) டெங்கு ஒழிப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் முன்னிலையில் தமிழக அரசின் முதன்மை செயலாளரும் வருவாய் நிர்வாக ஆணையருமான சத்யகோபால் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-



தமிழ்நாடு அரசு டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளாக வருவாய்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. 50 வீடுகளுக்கு ஒரு டெங்கு ஒழிப்பு பணியாளரும், 500 வீடுகளுக்கு மருத்துவத்துறையை சார்ந்த அலுவலர்களும் தினந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு குடியிருப்புகளில் உள்ள ஏடிஸ் லார்வாக்களை ஒழித்தும், கொசுப்புழு வளருவதற்கான காரணிகளை அழித்தும் வருகின்றனர்.



மேலும், ஒரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஒர் துணை ஆட்சியர் நிலையிலுள்ள அலுவலர்கள் மூலம் திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி, சுகாதாரத்துறையின் மூலமும், தன்னார்வலர்கள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மூலமும் பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என முதன்மை செயலாளரும் வருவாய் நிர்வாக ஆணையருமான சத்யகோபால் தெரிவித்தார்.

முன்னதாக முதன்மை அவர், வடவள்ளி அண்ணா பல்கலைகழகத்தில் புதிய எளிமையான மற்றும் அதிக பயன்தரக்கூடிய முறையில் மரக்கன்று நடும் திட்டத்தினை தொடங்கி வைத்து, பி.என்.புதூர் பகுதியில் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதியின் சுகாதாரம் குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.



இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், சார் ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன், உதவி ஆட்சியர் சரண்யாஹரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...