கோவை, அக்டோபர். 29: கோவையை சேர்ந்தவர் செண்பகராமன். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி. இவரது மகன் சிவக்குமார்(38) கோவை வருமான வரித்துறை, தலைமையிட துணை ஆணையராக பணியாற்றி வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு, ஐ.ஆர்.எஸ். தேர்ச்சி பெற்றவர்.
இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி சிவக்குமார் திடீரென மாயமானார்.
குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், 13-ம் தேதி அதிகாலை, 1.00 மணியளவில், சிவக்குமார் வீட்டில் இருந்து ஒரு சூட்கேசுடன் வெளியேறியது, அவர் குடியிருப்பில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
அவரது மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டு உள்ளிட்ட அனைத்தையும் வீட்டில் வைத்து சென்றுள்ளார்.
குடும்ப பிரச்னை காரணமாக, சிவக்குமார் வீட்டை விட்டு சென்றிருக்கலாம் என, கூறப்பட்ட நிலையில் சிவக்குமாரை தேடி தனிப்படை போலீசார் கோவா சென்றுள்ளனர்.