கோவை, அக்டோபர் 28: கோவையில் செயல்பட்டு வரும் சொடலமுத்து அன்ட் கோ நிறுவனத்திற்கு சிறப்பு ஏற்றுமதி விருதை கேரள அமைச்சர் வழங்கி கவிரவித்தார்.

கோவையை மையமாகக் கொண்டு ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் வெளிநாடுகளுக்கு அதிகளவிலான வர்த்தகத்தை செய்து வருகின்றன சில நிறுவனங்கள். அந்த வகையில் வெளிநாடுகளுக்கு, அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திற்கு, ஆண்டுதோறும் பொறியியல் ஏற்றுமதி மேம்பாடு கவுன்சில் சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2015-2016 ஆம் ஆண்டில், அதிகளவில் ஏற்றுமதி செய்த சொடலமுத்து அன்ட் கோ நிறுவனம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த விருதை அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு. கே.எஸ். பாலமுருகனிடம், கேரள தொழில்துறை அமைச்சர் திரு. ஏ.சி. மொய்தீன் வழங்கினார்.
1970-ம் ஆண்டு முதல் காகிதக் கோண்கள், குழாய்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனம், அமெரிக்கா, இத்தாலி, பிரேசில், மெக்சிகோ, ரஷ்யா, எகிப்து, துருக்கி, தென்னாப்ரிக்கா உள்ளிட்ட 60 நாடுகளுக்கு தங்களது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது.