சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் தேவை

மும்பையைச் சேர்ந்த பிரபல பறவையியல் ஆராய்ச்சியாளர் சலீம் அலி புகழைப் போற்றும் வகையில் கடந்த 1990 ஆம் ஆண்டு சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையம் கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த பறவையியல் ஆராய்ச்சி மையமானது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. 

நாடு முழுவதும் இருந்து பல்வேறு திட்டப் பணிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, எஸ்.ஏ.சி.ஓ.என் இணையதளத்தில், பறவையியல் தொடர்பாக 10 திட்டப் பணிகள், பல்வேறு அம்சங்களில் இடம்பெற்றுள்ளன. 

இந்த நிலையில், சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்தில், 32 ஜீனியர் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள், 4 சீனியர் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள், 2 திட்ட விஞ்ஞானிகள், ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவர், இணை ஆராய்ச்சியாளர், உதவி தொழிற்நுட்பாளர், கணினி அல்லது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன. 

சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்தின் http://www.sacon.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, நவம்பர் 10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பறவையியல் தொடர்பான பட்டப்படிப்புகளை படித்தவர்கள் தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் நவம்பர் கடைசி வாரத்தில் ஆனைக்கட்டியில் உள்ள சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்தில் நடக்கும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...