சிறுவயதிலேயே குழந்தைகள் நோயாளிகள் ஆவதை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு குழந்தைகள் நல மையம் ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, குழந்தைகள், கற்கும் திறனின்மை, கவனம் பற்றாக்குறை, வளர்வதில் தாமதம், கேட்கும் திறனிழப்பு, மனநலம் பாதிப்பு போன்ற பல நோய்களால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படும், குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைகளை குழந்தைகள் நல மையம் அளித்து வருகிறது.
சிறந்த மருத்துவ உளவியாலர், மனநல மருத்துவர், பேச்சு சிகிச்சையாளர், தொழில்முறை சிகிச்சையளிப்பவர் உள்ளிட்ட பெரும் குழுவை அமைத்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், குழந்தைகள் சிறிய வயதில் நோயாளிகள் ஆவதை தடுக்கும் வகையில், இலவச விழிப்புணர்வு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 27-ம் தேதி முதல், நவம்பர் 27-ம் தேதி வரை சர்வதேச தொழில் சிகிச்சை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன்மூலம், குழந்தைகள் குழந்தைகள் நோய்களால் பாதிக்கப்படுவதை தடுக்கும் விழிப்புணர்வை குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது.