கோவையில் வரும் சனிக்கிழமை வரை மழை நீடிக்கும் என கோவை வேளாண் பல்கலைக் கழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை இன்று துவங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர பகுதிகள் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மிதமான மழை பெய்யத் துவங்கியுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை வரை பரவலாக வடகிழக்கு பருவ மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக வானிலை ஆய்வு மையத்தின் வானவியல் துறைத் தலைவர் எஸ்.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
"தென்கிழக்கு தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்த இரு தினங்களுக்கு கோவையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு கோவையில் பருவ மழைக்காலத்தில் 347 மில்லி மீட்டர் மழை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 135 மில்லிமீட்டர் மழையே பெய்தது. இந்த வருடம் 327 முதல் 347 மில்லி மீட்டர் மழை எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கோவை, ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். விருதுநகர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையே பெய்யும்". என்றார்.
மேலும், இந்த பருவ மழையின் போது பெறப்படும் நீரினை வீணடிக்காமல் தேக்கி வைத்து விவசாயிகள் பயனடைய வேண்டும். கோவை மாநகராட்சி நிர்வாகம் மாநகரப் பகுதிகளில் வடிகால் குழாய்களை சீரமைத்து வைக்க வேண்டும் எஸ்.பன்னீர் செல்வம் கூறினார்.