பெங்களூரூ சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையம் கோவை மாவட்டம் இருகூரில் தொடங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் இருகூரில் உள்ள கண்டெய்னர் கார்பரேஷன் ஆப் இந்தியாவின் ஒருங்கிணைந்த கண்டெய்னர் டெப்போவில் இருந்து பெங்களூரூ சர்வதேச விமான நிலையம், தனது சரக்கு முனையத்தை கடந்த 5-ம் தேதி சுங்க அனுமதி பெற்ற சரக்கு போக்குவரத்தை தொடங்கியுள்ளது.
இதன்மூலம், கோவை ஏற்றுமதியாளர்கள் விமானம் மூலம் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பும் தங்கள் சரக்குகளை கோவை, இருகூரிலேயே சுங்கத்தீர்வை செய்து கொள்ளலாம். சுங்கத்தீர்வை செய்யும் சரக்குகள் உடனுக்குடன் பெங்களூர் விமான நிலையத்திற்கு சுங்க அனுமதி பெற்ற லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
அங்கிருந்து புறப்படும் விமானங்கள் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் கொண்டு செல்கின்றனர். இதுவரை இந்த வசதியை பயன்படுத்தி கனடா, நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் கோவையில் உள்ள ஏற்றுமதியாளர்கள் பாதுகாப்பான முறையில் தங்கள் சரக்குகளை கோவையில் இருந்தே ஏற்றுமதி செய்வதோடு, பொருளாதார ரீதியாகவும் பயன்பெறுவதாக முனையத்தின் அதிகாரி சரவணன் தெரிவித்துள்ளார்.