கோவை மாவட்டம் வ.உ.சி. சிறுவர் பூங்காவை பராமரிக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில், கோவை மக்களின் பொழுதுபோக்கு இடமான வ.உ.சி. சிறுவர் பூங்கா உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எருக்கஞ் செடி, திறந்த வெளியில் மின்சார இணைப்பு பெட்டி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரமற்ற குப்பை கூடங்கள், மேலும், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளன.

இந்தப்பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் போது பல இன்னல்களையும் எதிர்கொள்கின்றனர். பல மாதங்களாக பராமரிப்பற்ற நிலையில், இருக்கின்ற சிறுவர் பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் உடனே சீர்செய்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.