கோவை சுங்கம் பகுதியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி 5- இலக்கமிட்ட (TN 66 A 5955) தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
பேருந்தை பூலுவம்பட்டி பகுதியை சேர்ந்த ஓட்டுனர் ஆபிரகாம் பிலிப் (32) இயக்கி வந்தார்.
அதேநேரத்தில், சுங்கம் பகுதியில் இருந்து 5- இலக்கமிட்ட மற்றொரு தனியார் பேருந்து (TN 37 AP 7373) வந்தது. இந்த பேருந்தை அன்னூரை சேர்ந்த ஓட்டுனர் பால சுப்ரமணியன் (39) இயக்கினார்.
இந்த இரு பேருந்துகளும் ஒரே வழிப்பாதையில் பயணிப்பதால் ஓட்டுனர்களுக்கு இடையே முந்திச் செல்வதில் போட்டி ஏற்பட்டது.

இதனால், ஒருவரை ஒருவர் முந்த போட்டி போட்டுக்கொண்டு தாறுமாறாக பேருந்தை இயக்கினர்.
பேருந்து ஒலம்பஸ் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது இரு பேருந்துகளும் ஒன்றோடு ஒன்று உராய்ந்து விபத்து ஏற்பட்டது.

இதில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. வார இறுதி நாள் என்பதால் பேருந்து நிறுத்தத்தில் ஆட்கள் குறைவாகவே இருந்தனர். இதனால் பெரும் உயிர் சேதம் தடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் பேருந்து ஓட்டுனர்கள் இருவரையும் காந்திபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கமாகவே 5 இலக்கமிட்ட பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு இயக்கப்படுவதாகவும். அதிகாரிகள் இந்த பிரச்சனையை கண்டும் காணமல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், தாறுமாறாக பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.