பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் நினைவுப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியர்கள்

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கு பெறும் கட்டுரை, பேச்சு, மற்றும் கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் இன்று (அக்டோபர் 21) நடைபெற்றது. 



கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கோவை மாநகர தெற்குமாவட்ட திமுக செயலாளர்,  சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமைவகித்தார்.

இதனைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றோர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அசன்முகமது ஜின்னா ஆகியோர் வெற்றிபெற்றோருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.



இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.முத்துசாமி, கோவை மாநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளங்கோ, மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், அவைத் தலைவர் வெ.ந.பழனியப்பன் மற்றும் கழக முன்னணி மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...